Wednesday, September 3, 2014

தோலில் உண்டாகும் நோய்கள்-ஜோதிட குறிப்பு 

மனித உடலை பாதுகாப்பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தோலாகும். ஒருவரை அழகாக எடுத்து காட்டுவது தோலின் நிறமே. கறுப்போ, சிவப்போ ஒரு மனிதனை முழுமையாக்கி உடலின் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ஒரு போர்வைப் போல் அமைந்து உள்ளது. தேவையற்ற மாசு, தூசு மற்றும் கிருமிகள் அண்டாமல் நம் சதையை பாதுகாக்கிறது. சிவப்பாக இருப்பவர்களுக்கு மவுசு அதிகம் என்றாலும் கறுப்பாக இருப்பவர்களும் கறுப்பே அழகு, காந்தலே ருசி என பெருமைப்பட்டு கொள்பவர்களும் உண்டு. தோலை பாதுகாக்க, அழகுபடுத்த எத்தனையோ அழகு  குறிப்புகள், அலங்கார சாதனங்கள் என வந்தாலும் இயற்கை அழகு இயற்கை அழகு தான்.

இந்த தோலில் ஏதாவதொரு  அறுவெறுக்கத் தக்க மாற்றங்கள் உண்டானால் பிறர் நெருங்கி பழகவே பயப்படுவார்கள். கையால் தண்ணீர் வாங்கி குடிக்க கூட தயங்குவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் கூட அவர் உடுத்திய ஆடை உள்ளாடை, கோப்பை போன்றவற்றை பயன்படுத்த மாட்டார்கள். இப்படி தோலில் பாதிப்புகள் உண்டாவதற்கும். நம் ஜாதகத்தில் அமையும் நவ கிரகங்களின் அமைப்புகளே காரணமாகின்றன.

ஜென்ம லக்னத்திற்கு 6,8 ஆகிய பாவங்களில் சூரியன் செவ்வாய் போன்ற உஷ்ண கிரகங்கள் அமையப் பெற்று சுபர்களின் பார்வையின்றி இருந்தால் தோல் சம்மந்தமான வியாதிகள் உண்டாகும்.

குறிப்பாக ராகு சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், ராகு சாரம் பெற்று சந்திரன் சுபர் பார்வையின்றி 6,8 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் கண்டிப்பாக தோல் நோய் உண்டாகும்.

அது போலவே சுக்கிரன் அஸ்தங்கம் பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் குறிப்பாக 8ல் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் தோல் சம்மந்தமான ரகசிய வியாதிகள் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கையுடன் 8ல் அமையப் பெற்றால் கண்டிப்பாக ரகசிய நோய்கள் உண்டாகிறது.

சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்று ஜல ராசியில் அமைய பெற்று உடன் பாவிகள் சேர்க்கை வலுப் பெற்றாலும் சந்திரன் சுக்கிரன் ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், லக்னாதிபதியும் சந்திரனும் ராகு கேது சேர்க்கை பெற்றாலும் சந்திரனுக்கு இரு புறமும் செவ்வாய் சனி அமையப் பெற்றாலும், சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று லக்னத்தில் அமைய பெற்றாலும், குறிப்பாக சந்திரன் லக்னாதிபதி சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ராகு கேது ஆதிக்கத்தில் அமைய பெற்றாலும், சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று மேஷம் ரிஷபத்தில் அமையப் பெற்றாலும் அந்த ஜாதகருக்கு கண்டிப்பாக தோல் வியாதி உண்டாகின்றது. சூரியன்,செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

No comments:

Blogger Gadgets