மகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்
மகரம் (உத்திராடம் 2,3,4 ம் பாதம் திருவோனம், அவிட்டம் 1,2,ம் பாதம்)
மகர ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு முழங்கால்களையும் குறிக்கும் நான்காவது சர ராசியாகும். உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். ஆண் தன்மையற்றதாக விளங்கும் இது இரவில் வலுப்பெற்றதாக அமைகிறது.
உடலமைப்பு,
மகர ராசியில் பிற்ந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும் தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையுடனேயே முகத்தில் கவலையுடன் இருப்பார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களாகவும் அழுத்தம் திருத்தமாக பேசுபவராகவும் இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும்.
குண அமைப்பு,
தன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் விரோதிகளானாலும் ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் பண்பு கொண்டவர்கள் மகர ராசியில் பிறந்தவர்கள் மிகவும் ஈகை குணம் கொண்டிருப்பார்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் இரண்டு வித ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள். எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் செயல்படும் இவர்களுக்கு கள்ள கபடமற்ற வெகுளித்தனமான குணம் இருக்கும.
மண வாழ்க்கை
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் மன ஒற்றுமையுடன் இணை பிரியாத குடும்ப நிர்வாகத்தை சிறப்பாகவும் சிக்கனமாகவும் செய்வார். ஒருவர் கோபப்படும் போது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். மகர ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள் என்பதால் எத்தனை துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டாவது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.
பொருளாதார நிலை,
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். வரவேண்டிய பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள். சுகத்தையும் அமைதியை அனுபவிக்க நினைத்த போலிலும் எதையும் அனுபவிக்க முடியாமல் பொருளீட்ட வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது. பூமி நிலம் போன்றவற்றை சேர்த்தாலும் அதனால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கும் நேரம் வாழ்க்கையில் சுக துக்கங்கள் வரினும் சௌகரியங்களை பெருக்கிக் கொள்வதற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகும்.
புத்திர பாக்கியம்,
மகரராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்றும் தாமதமாகத்தான் அமையும். பெண் குழந்தைகளாக சற்று அனுகூலப் பலனை பெறும் இவர்களால் ஆண் பிள்ளைகளால் எந்தவித ஆதாயங்களும் கிடைப்பதில்லை. கடைசி காலத்தில் கூட பிள்ளைகள் வைத்து காப்பாற்றுவார்கள் என்று கூறமுடியாது. அப்படியே இருந்தாலும் மன வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும். தனக்கென சிறு சேமிப்பையாவது சேர்த்து வைப்பதுதான் சிறந்தது.
தொழில்,
மகர ராசியில் பிறந்தவர்கள் பல பெரிய தொழிற்சாலைகளை அமைத்து பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றலை பெற்றிரிப்பார்கள். கட்டிடத்துறை, பொறியியல் துறை போன்றவற்றிலும், பதிப்பாசிரியராகவும், விஞ்ஞானியாகவும் புகழோடு விளங்குவார்கள். எந்தவொரு துறையிலும் புகழோடும் பெயரோடும் தங்கள் லட்சியங்களிலும் படிப்படியாக முன்னேற்றமடைவார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். மற்றவற்றை எல்லாம் அடுத்தபடியாக தான் நினைப்பார்கள். வாழ்வின் முற்பாதியில் கடமை தவறாது கடின உழைப்பினை மேற்கொண்டாலும் வாழ்வின் பிற்பாதியில் எல்லா சுகபோகங்களையும் சிறப்புடன் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
உண்ணும் உணவுகள்,
மகர ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கீரை வகைகள், வாழைப்பழங்கள், வாழைத் தண்டு, கேரட், வெங்காயம், கொழுப்புச் சத்த குறைவான உணவு வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழமுடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 8, 5,6,17,14,15
கிழமை - சனி, புதன்
திசை -மேற்கு
நிறம் - நீலம், பச்சை
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்
No comments:
Post a Comment