Monday, September 22, 2014

Wednesday, September 3, 2014

மீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.

உடலமைப்பு,

மீனராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள். பேசுவது கூட மெல்லிய குரலில் தானிருக்கும். நடக்கும் போது கைகள் இரண்டையும் வீசி உடல் குலுங்கும்படி நடப்பார்கள்.

குண அமைப்பு,

மீனராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் என்று சொன்னால் அது மிகயாகாது. மனத் தெளிவுடன் இருக்கும்போது தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். தன்னிடமுள்ள எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் கொண்டவர்களாதலால் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும்  செய்வார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்களாதலால் இவர்களை நம்பி எந்த காரித்திலுமே இறங்க முடியாது. மீன ராசிக்காரர்கள் தமக்கு தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள். வீண் விவாகரங்களில்அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இதனால் இவர்கள் வசிக்கும் இருப்பிடத்தை கூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால் இவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள்.

மண வாழ்க்கை

மீன ராசியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கையையே விரும்புவார்கள். இவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணமும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் உற்றார் உறவினர்களால்  தேவையற்ற மன  சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்து சேரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து அமைதியும் குறையும். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் இருப்பதால் ஆன்மீக, தெய்வீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

பொருளாதாரநிலை,

மீனராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவர்களாகவே இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும்  பண வரவில் தட்டுப்பாடு இருக்காது.   பண வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்தான் செல்வத்தை  சேர்ப்பார்கள். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் பூமி, வீடு, மனை, வண்டி, வாகனங்களை அமைத்துக் கொள்வார்கள். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள்.  நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.

புத்திர பாக்கியம்,

மீன ராசியில் பிறந்த அனேகருக்கு புத்திர பாக்கியம் இருப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். வரக்கூடிய வாழ்க்கை துணையால் சர்புத்திர பாக்கியமான ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண் என பிறக்கும். அவர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஜல சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். உதாரணமாக கப்பல், படகு, தோணி, போன்றவற்றில் அடிக்கடி பிராணயம் செய்பவர்களாகவும, மீன்பிடி தொழிலில் வல்லவராகவும் இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களாலும் லாபம் உண்டாகும். எத்தொழிலில் ஈடுபட்டாலும் அத்தொழில் முதன்மை வகிக்கும் ஆற்றலை இவர்கள் பெற்றிருப்பார்கள்.

உணவு வகைகள்,

மீன ராசியில் பிறந்தவர்கள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது நல்லது. பசலைகீரை, கீரை வகைகள், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, கேரட், முழு கோதுமை ரொட்டி, பார்லி, கேழ்வரகு போன்றவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் -1,2,3,9,10,11,12
கிழமை -வியாழன், ஞாயிறு
திசை - வடகிழக்கு
நிறம் - மஞ்சல், சிவப்பு
கல் - புஷ்ப ராகம்
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்

கும்பம்(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)

கும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். கும்பராசி வாயு தத்துவத்தை கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.

உடலமைப்பு,

கும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு  அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.

குண அமைப்பு,

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.

மண வாழ்க்கை

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.

பொருளாதார நிலை,

பண வரவுகள் கும்ப ராசிகாரர்களுக்கு போதுமென்ற  அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை  ஏற்படாது என்றாலும்  சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால்  பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்து கொள்வார்கள். இவற்றிற்காக ஏற்படும் செலவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.

புத்திர பாக்கியம்,

கும்பராசியில் பிறந்தவர்கள் புத்திர பாக்கியம் குறைவு, அப்படியிருந்தாலும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் உண்டாகும் என்றாலும் அச்சொத்துக்களால் இவர்களின் பிள்ளைகளுக்கு நற்பலன்கள் அமையும். கும்பராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவரென்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் நல்லபடி நினைக்க வேண்டுமென்று  எதிலும் நிதானமாக நடந்து கொள்வார்கள்.

தொழில்,

கும்ப ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. என்றாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். மின்சாரம் இலாகா, தீ அணைக்கும் படை, போலீஸ்துறை போன்றவற்றில் நல்ல பதவிகளை வகிப்பார்கள். அதுபோல இரும்பு, எஃகு  சம்பந்தப்பட்ட தொழில், புதைபொருள் ஆராய்ச்சி போன்றவற்றிலும் அக்கறையாக செயல்படுவார்கள். இவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியாது என்றே சொல்லலாம். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப்  பெற்று சிறப்போடு வாழ்வார்கள். இவர்களிடம் உள்ள குறை  என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை  துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தினால் பல இழப்புகளையும் சந்திப்பார்கள்.

உணவு வகைகள்,

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி போன்றவற்றை உண்பதும், அதிக நீர் அருந்துவதும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் - 5,6,8,14,15,17

கிழமை - வெள்ளி, சனி

திசை -மேற்கு

நிறம் - வெள்ளை, நீலம்

கல் - நீலக்கல்

தெய்வம் - ஐயப்பன்

மகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்

மகரம் (உத்திராடம் 2,3,4 ம் பாதம்  திருவோனம், அவிட்டம் 1,2,ம் பாதம்)

மகர ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு முழங்கால்களையும் குறிக்கும் நான்காவது சர ராசியாகும். உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். ஆண் தன்மையற்றதாக விளங்கும் இது இரவில் வலுப்பெற்றதாக அமைகிறது.

உடலமைப்பு,

மகர ராசியில் பிற்ந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும்   தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும்.  காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையுடனேயே முகத்தில் கவலையுடன் இருப்பார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களாகவும் அழுத்தம் திருத்தமாக பேசுபவராகவும் இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும்.

குண அமைப்பு,

தன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் விரோதிகளானாலும் ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் பண்பு கொண்டவர்கள் மகர ராசியில் பிறந்தவர்கள் மிகவும் ஈகை குணம் கொண்டிருப்பார்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். இவர்களுக்கு  பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால்  மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் இரண்டு வித ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள். எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் செயல்படும் இவர்களுக்கு கள்ள கபடமற்ற வெகுளித்தனமான குணம் இருக்கும.

மண வாழ்க்கை

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் மன ஒற்றுமையுடன்  இணை பிரியாத குடும்ப நிர்வாகத்தை சிறப்பாகவும் சிக்கனமாகவும் செய்வார். ஒருவர் கோபப்படும் போது  ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். மகர ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள் என்பதால் எத்தனை துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டாவது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.

பொருளாதார நிலை,

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். வரவேண்டிய பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள். சுகத்தையும் அமைதியை அனுபவிக்க நினைத்த போலிலும் எதையும் அனுபவிக்க முடியாமல் பொருளீட்ட வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது. பூமி நிலம் போன்றவற்றை சேர்த்தாலும் அதனால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கும் நேரம் வாழ்க்கையில் சுக துக்கங்கள் வரினும் சௌகரியங்களை பெருக்கிக் கொள்வதற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகும்.

புத்திர பாக்கியம்,

மகரராசியில் பிறந்தவர்களுக்கு  புத்திர பாக்கியம் சற்றும் தாமதமாகத்தான் அமையும். பெண் குழந்தைகளாக சற்று அனுகூலப் பலனை பெறும் இவர்களால் ஆண் பிள்ளைகளால் எந்தவித ஆதாயங்களும் கிடைப்பதில்லை. கடைசி காலத்தில் கூட பிள்ளைகள் வைத்து காப்பாற்றுவார்கள் என்று கூறமுடியாது. அப்படியே இருந்தாலும் மன வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும். தனக்கென சிறு சேமிப்பையாவது சேர்த்து வைப்பதுதான் சிறந்தது.

தொழில்,

மகர ராசியில் பிறந்தவர்கள் பல பெரிய தொழிற்சாலைகளை அமைத்து பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றலை பெற்றிரிப்பார்கள். கட்டிடத்துறை, பொறியியல் துறை போன்றவற்றிலும், பதிப்பாசிரியராகவும், விஞ்ஞானியாகவும் புகழோடு விளங்குவார்கள். எந்தவொரு துறையிலும் புகழோடும் பெயரோடும் தங்கள் லட்சியங்களிலும் படிப்படியாக முன்னேற்றமடைவார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். மற்றவற்றை எல்லாம் அடுத்தபடியாக தான் நினைப்பார்கள். வாழ்வின் முற்பாதியில் கடமை தவறாது கடின உழைப்பினை மேற்கொண்டாலும் வாழ்வின் பிற்பாதியில் எல்லா சுகபோகங்களையும் சிறப்புடன் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

உண்ணும் உணவுகள்,

மகர ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கீரை வகைகள், வாழைப்பழங்கள், வாழைத் தண்டு, கேரட், வெங்காயம், கொழுப்புச் சத்த குறைவான உணவு வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழமுடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் - 8, 5,6,17,14,15
கிழமை - சனி, புதன்
திசை -மேற்கு
நிறம் - நீலம், பச்சை
கல் - நீலக்கல்
தெய்வம் - ஐயப்பன்

தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஆண் ராசியாகும்.  இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.

உடலமைப்பு,

தனுசு ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். உடல் நிறமும்  எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.

குண அமைப்பு,

தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும்  தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.

மணவாழ்க்கை,

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின் மற்றொரு  பெண்ணின் தொடர்பும் உண்டாகும். மனைவியால் தனசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.

பொருளாதார நிலை,

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவ வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்கு தடையின்றி அமையும். புதிய வீடு மனை வாங்குவதிலும் பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். தங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். சுகபோக வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.  பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள்.

புத்திர பாக்கியம்,

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு பிறந்ததாலும் அவர்களால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.

தொழில்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
பணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை,  கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். கூட்டுத் தொழில் இவர்களுக்கு அவ்வளவு சாதகப் பலனை தராது என்றாலும் வியாபாரிகளாக இருந்தால் சர்க்கரை, வெல்லம், பழவகைகள் முதலியவற்றை விற்று லாபம் பெறுவார்கள். பெரிய, பெரிய நிறுவனங்களில் காரியதரிசியாகவோ, மேற்பார்வையாளராகவோ, கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிலோ நன்றாக சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிட்டும்.

உணவுவகைகள்,

தனுசு ராசிகாரர்கள் பசலை கீரை, கேரட், முட்டை கோஸ், பச்சை பட்டாணி, பாதாம், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்த கொள்வதும் ஜில்லென்று சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் - 1,2,3,9,10,11,12

கிழமை - வியாழன், திங்கள்

திசை -வடகிழக்கு

நிறம் - மஞ்சள், பச்சை

கல் - புஷ்ப ராகம்

தெய்வம் - தட்சிணா மூர்த்தி

விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை )

விருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு  பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.

உடலமைப்பு,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.

குண அமைப்பு,

விருச்சிக ராசிகாரர்கள் நியாய  அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.

மணவாழ்க்கை,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.

பொருளாதார நிலை,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது  மற்றவர்களின் சொத்தாக  இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு  செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று  சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.

புத்திர பாக்கியம்,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.

தொழில்

சிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.

உணவு வகைகள்,

உணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் - 1,2,3,9,10,11

நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்

கிழமை - செவ்வாய், வியாழன்

திசை -தெற்கு

கல் - பவளம்

தெய்வம் - முருகன்

துலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்


துலாம்(சித்திரை 3,4, ம் பாதம். சுவாதி, விசாகம் 1,2 3ம் பாதம்)

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிர பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் அடி வயிற்றில் பாகத்தை குறிக்கும் மூன்றாவது சரராசியாகும். சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,23 பாதங்களிலும்   பிறந்தவர்கள் துலாராசியாக  கருதப்படுவார்கள். இது ஒரு சுப ராசியாகும். துலா ராசி பகலில் வலுப்பெற்றதாக இருக்கும்.

உடலமைப்பு,

துலா ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். சிரித்தால் இருபுறங்களிலும் அழகாக குழி விழும். இவர்களுக்கு சிறுவயதில் சிறு சிறு கண்டங்கள் ஏற்பட்டாலும் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள். மூக்கும் முழியுமாக அழகாக தோற்றமளிப்பார்கள். உதடுகள் அழகாக அமைந்திருக்கும்.

குண அமைப்பு,

நேர்மையே குறிக்கோளாக கொண்டவர்கள் துலா ராசிகார்கள். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை  போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள். வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவார்கள். வாக்கு சாதுர்யம் கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பதென்பது இயலாத காரியமாகும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாக பேசும் இவர்கள் வீட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல இருப்பார்கள். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள்.

மணவாழ்க்கை,

துலா ராசிக்காரர்களின் மண வாழ்க்கையான  திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் எப்பாடுபட்டாவது சுயகௌரவத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் நல்ல அறிவாற்றலுடன் அமைதியான குணத்துடனும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத பண்புடனும் அமையும். இவர்களுடைய தேவைகளை முன்கூட்டியே அறிந்து வரவுக் கேற்றவாறு குடும்பம் நடத்தி சிக்கனமாக நடந்துகொள்வார்கள். காலமறிந்து உணவளிப்பது எவ்வளவு மனகுறைகள் ஏற்படினும் அனுசரித்து  நடப்பது, ஒருவர் கோபப்பட்டால் ஒருவர் அமைதி காப்பது போன்றவற்றால் குடும்ப சூழல் மிகவும் சிறப்பாக அமையும். மன வேற்றுமையோ,  வெறுப்போ ஏற்படாமல் நடந்து கொள்வார்கள். விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கை துணையும் அமைவதால் பிரச்சினைகளற்ற வாழ்க்கை அமையும்.

பொருளாதார நிலை,

துலா ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்பே செலவுகள் வாயிற் கதவை தட்டும்.  குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருப்பதால் சேமிக்க முடியாமல் போகும். என்றாலும் இவர்களின் தேவைக்கேற்றபடி பணவரவுகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஏழை, எளியவர்களுக்கு இல்லை என்று வருபவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். சிறு வயதில் கஷ்டங்களை  சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும்  வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். நடு வயது வரை இவர்களது  வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்தால் மற்றவர்களுக்காக கடன் வாங்குவதையும் அதற்காக வட்டி கட்டுவதையும் தவிர்க்கலாம். நல்ல பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதால் பொது நல சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள் தெய்வீக யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும் என்பதால் பயண செலவுகளும் அதிகமாக இருக்கும். நிரந்தரமான வருவாய் இருக்கும். நிரந்தரமான வருவாய் இவர்களுக்கு இருக்கும் என்பதால் சம்பாதித்து சேமித்து சந்ததியினருக்கு சேமித்து வைக்க தவறமாட்டார்கள்.

புத்திர பாக்கியம்,

துலா ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். அப்படி இருந்தாலும் பெண் குழந்தைகள் யோகமே  இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்படும் பின்பு சரியாகும்.

தொழில்,

துலா ராசியில் பிற்ந்தவர்களுக்கு அரசியல் அல்லது அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். போலீஸ் துறை , இராணுவத்துறை , பதிப்பாசிரியர்கள், பத்திரிகைதத் துறை, ஓட்டல், தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வெகு சீக்கிரத்தில் உயர்ந்த அந்தஸ்தினை பெறுவார்கள். இவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்த்த பின்னரே எதிலும் ஈடு படுவார்கள். என்றாலும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடும்போது கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பார்கள். மற்றவர்களின் கைகிபிடித்து கால் பிடித்து முன்னேறுவது பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே  முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கொடுத்து உதவுவார்கள். இவர்களும் சலுகைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து விடுவார்கள்.

உணவு வகைகள்,

துலா ராசியில் பிறந்தவர்கள் நிறைய காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கொழுப்பு பொருட்கள், எண்ணெய் வஸ்துகள் போன்றவற்றை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் - 4,5,6,7,8

நிறம் - வெள்ளை, பச்சை

கிழமை - வெள்ளி, புதன்

திசை -தென் கிழக்கு

கல் -வைரம்

தெய்வம் - லக்ஷ்மி

கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்


கன்னி (உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)

கன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.

உடல் அமைப்பு,

கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,

குண அமைப்பு

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.

மணவாழ்க்கை

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும்  விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.

பொருளாதார நிலை,

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும்.  வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

புத்திர பாக்கியம்,

பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.

தொழில்

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு  தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது  ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.

உணவு வகைகள்,

கன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 4,5,6,7,8
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை
திசை - வடக்கு 
தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும்


சிம்ம (மகம், பூரம், உத்திரம், 1ம் பாதம்)

சிம்ம ராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவான். இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படகிறார்கள். சிம்ம ராசி ஒரு பார்வை ராசியாகும். இந்த ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.

உடலமைப்பு,

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.

குண அமைப்பு,

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்கள். சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகஸ்துதிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது.  வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை  விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை  வேரோடு களைந்த பின்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பாகுவதை தவிர்ப்பார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் ªவ்ற்றி இவர்களுக்கே. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரதாலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள்.  என்றாலும் தங்களுடைய திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போரலலடி வெற்றி பெறுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில்   மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.

மண வாழ்க்கை,

சிம்மராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை சொந்தத்தில் அமையாது. அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்த முடியும். அடக்கி ஆளும் குணமும், சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்களாதாலால் கருத்து வேறுபாடுகள் நிறையவே ஏற்படும். திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

பொருளாதார நிலை,

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் தனது தேவைக்கேற்றவாறு எந்தவிதத்திலாவது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வார்கள். உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. உத்தியோகத்திலோ, தொழிலிலோ ஊதியம் பெறுவது ஒருவாரு இருந்தாலும் தன்னுடைய சாதுர்யமான சாமர்த்தியத்தால் பண வரவுகளை பெருக்கிக் கொள்வார்கள். கடன் வாங்குவதென்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை நியாயமாக திருப்பி செலுத்தி விடுவதால் கடன்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை  அமைத்துக் கொள்வார்கள். வண்டி, வாகன, வசதிகளும் உண்டாகும். ஆடம்பரமான உடைகளை  நவீன பொருட்களையும் அதிகம் விரும்புவதால் மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.

புத்திர பாக்கியம்,

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும். முன்யோசனை அதிகம் உடையவர்கள் என்பதால் பிள்ளைகள்  எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வார்கள். கடவுளின் பூரண ஆசி பெற்றவர்கள் சிம்ம ராசிக்கார்கள் என்பதால் புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள்.

தொழில்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.  அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டாலும் எங்கும் அதிக காலம் தங்கமாட்டார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள் என்றாலும் உத்தியோகத்திலிருந்தால் முன்னுக்கு வரமுடியும். அதுவே தொழிலாளிகளானால் மிகவும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கலை துறையில் கூட இவர்களால் பிரகாசிக்க முடியும் என்றாலும் பணவரவுகளை எதிர்பர்க்க முடியாது. சற்று  முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.

உணவு வகைகள்,

சிம்மராசி காரர்கள் முடிந்தவரை கிழங்கு வகைகளை நீக்கி கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால்  மலச்சிக்கல் ஏற்படாது. எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதால் கொழுப்பு அதிகமாவதை குறைக்க முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் -வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் -  மாணிக்கம்
திசை - கிழக்கு 
தெய்வம் - சிவன்

கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்

கடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

உடலமைப்பு,

கடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.
குண அமைப்பு,

கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப  நண்டுபிடி போட்டு செய்து  முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே  அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும்  வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல்  தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.

மண வாழ்க்கை,

இவர்களுக்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்ககக்கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.
பொருளாதார நிலை,

கடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள்.  கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிய பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்கா செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.
புத்திரபாக்கியம்,

 கடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய  கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும்,  சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு  அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.

உணவு வகைகள்,

கடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு 
தெய்வம் - வெங்கடாசலபதி

மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்


மிதுனம் (மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)

மிதுனராசியின் அதிபதி வித்தை, கல்வி, கேள்வி, விவேகம், கலை, ஆகியவற்றிற்கெல்லாம் காரகம் வகிப்பவரும், ராஜோ குணம் கொண்டவருமான புதன் பகவானாவார். கால புருஷனது அங்க அமைப்பில் தோள் பாகத்தை குறிப்பது மிதுன ராசி என்பதால் இது முதல் உபய ராசியாகும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3,4 பாதங்களும், திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன.

உடலமைப்பு

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும். கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை  வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும். அடிக்கடி மனக் குழப்பமும் உண்டாகும். நீண்ட ஆயுள் அதாவது 80 வயதுக்கு குறைவில்லாமல் வாழ்வார்கள். 

மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் கழிக்க மாட்டார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கோமாளி போலவும் ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும்  அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்வார்கள்.  மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம்  எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை  துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களுக்கு  துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்டவர்களின் கூட்டத்தில் கூட தன்னுடைய  ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும். கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

மணவாழ்க்கை,

திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகளாகவே இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவர்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள். சிற்றின்பத்தில் சற்று  ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் தேவையற்ற தொடர்புகளும் இருக்கும்.

பொருளாதார நிலை,

மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் சுக வாசிகள் என்றே சொல்லலாம். வீடு, மனை, வசதியும், வண்டி, வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும்.  பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வாழ்க்கை வசதிகளுக்காக விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாழ்க்கை வசதிகளைபெருக்கி கொள்ள அதிகமாக கடன் வாங்கவும் தயங்கமாட்டார்கள். இதனால் நிறைய கடனும் அதற்காக வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வம்பு, பிரச்சினைகளை சந்தித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.

புத்திரபாக்கியம்,

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். புத்திர பாக்கியமும் சற்று தாமதித்தே அமையும். இவர்கள் தங்களது அவசர முடிவால் உற்றார், உறவினர் மற்றும் பெற்ற பிள்ளைகளின் ஆதரவைக்கூட இழந்து விடக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடித்தாலே உறவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

தொழிலமைப்பு,

மிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பலருக்கு ஆலோசனைகள் வாங்கக்கூடிய திறமை இருக்கும்.  உத்தியோக அமைப்பு பெற்றவர்களாக இருந்தாலும் ஏதாவது உபதொழில் செய்து சம்பாதிக்க முடியுமா என யோசிப்பார்கள். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில் வல்லவர்கள். விவசாயத்திலும் ஈடுபாடு இருக்கும். முடிந்தவரை கடின உழைப்பின்றி நாசூக்கான வேலைகளையே  தேர்ந்தெடுப்பார்கள். கணக்கு, கம்ப்யூட்டர் விஞ்ஞான ஆராய்ச்சி, கதை வசனம் போன்றவற்றிலும் இவர்களின் திறமை  பளிச்சிடும். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும்.

உணவு வகைகள்,

மிதுன ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை காரமாக உண்பதையும் உஷ்ண சம்மந்த உணவு வகைகளையும் தவிர்க்கவும். பால், தயிர், நெய், வெண்ணெய், பசலை கீரை, தக்காளி, பார்லி, அவரை, தர்பூசணி, முட்டை, பழவகைகள், வாழைப் பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் -5,6,8,14,15,17
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி 
கல் -மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் - விஷ்ணு

ரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்



ரிஷபம்(கிருத்திகை 2,3,4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதம்)

ரிஷப ராசியின் அதிபதி ஸ்ரீமகா சுக்கிர பகவானாவார். ரிஷப ராசி ஸ்திர ராசியாகும். வெண்மை நிறம் கொண்ட ரிஷபராசியின் அதிபதி சுக்கிரன். குருவுக்கு அடுத்தபடியான முழு சுபராவார். ரிஷப ராசி பெண் ராசியாகும். நீரின் தத்துவத்தை  கொண்டதாகையால் சீதள சுபாவம் இருக்கும். ரிஷ ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். மற்றவை பகை ராசிகளாகவும் இருக்கின்றன. கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்களில்பிறந்தவர்கள் ரிஷப ராசிகாரர்களாவார்கள்.

உடலமைப்பு,

 ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தக்கூடிய  அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டவர்கள் என்றாலும் கம்பீரமான தோற்றம் இருக்கும். நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும, அழகான அங்க அமைப்புகளால் அமைந்திருக்கும். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருக்கும். குட்டையான  விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் புகழ், கௌரவம், அந்தஸ்து யாவும் அமையும்.

குண அமைப்பு,

 ரிஷப ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள் என்றாலும் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க மேற்படுத்திக் கொள்வதில் சற்று சங்கடப் படுவார்கள். வார்த்தைகளை அளந்து பேசும் இவர்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசி  பிறர் தம் பேச்சை வெல்ல இடம் தரமாட்டாமல் பேச்சில் தனக்ஙகென தனி பாணியை வைத்திருப்பார்கள். நல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவர்கள். ஆதலால் எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றுவார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும்  யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிப்பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவர்களுக்கு பொருந்தும். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆடம்பரமாக இல்லா விட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவார்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குதர்க்கமாகவும்,பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள். எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மையும்  அதிகமிருக்கும்.

மணவாழ்க்கை,

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதிலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு  தள்ளப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். திருமண பிராப்தம் சற்று தாமதமானாலும் மனைவி அடக்கமுள்ளவளாக இருப்பதால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். மனைவி வழியில் வீண் விரயங்களும், கடன்களும் ஏற்படும். திருமணமாகாவிட்டாலும் மாதர்களின் சேர்க்கைகள் இருக்கும்.  தேவையற்ற பெண் சகவாசங்களை தவிர்த்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

பொருளாதார நிலை,

 தாராளமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு தன வரவுகள் தாரளமாக இருக்கும். இளம் வயதில் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும், வளர வளர தனது சொந்த முயற்சியாலோயே தனக்கேற்ற பணத் தேவைகளை சரி செய்து கொள்வார். இவர்கள்  மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாதலால் அதனால் சில கடன்களை சந்திப்பார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள், சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் உயர்வுகள் போன்றவை உண்டாகும். எதையும் புதிதாகத்தான் வாங்குவார்கள்.

புத்திர பாக்கியம்,

 ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற்றால் புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் அமையும். அதிலும் இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளால் வீண் கவலைகளும், தொல்லைகளும், செலவுகளும் ஏற்படுமே தவிர அனுகூலப்பலனை அடைய முடியாது. அதுவே பெண்குழந்தைகளாக இருந்தால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெற முடியும். பிற்காலத்தில் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.

தொழில்,

 ரிஷப ராசியில் பிறந்த ஜாதகர் சிறு வயதிலிருந்தே சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்து படிப்படியாக உயர்ந்து விடுவார். கலைத் துறை, இசைத் துறை போன்றவற்றில் ஆர்வமும், நவீன தொழில்களில்  லாபமும் கிட்டும். பத்திரிகை துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அடிமைத் தொழில்செய்வதை அறவே விரும்ப மாட்டார்கள். கூட்டாளிகளை நம்பி எந்தவொரு செயலையும் ஒப்படைக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக  மேற்கொள்ளும் பயணங்களால் சில நேரங்களில் அலைச்சல் களும் அதிகரிக்கும். பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிபதியாகலாம். சினிமா தியேட்டர் வாங்கலாம். ஜவுளிக் கடை, நகைகடை, பால் பண்ணை வைக்கும் வியாபாரம் போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் யாவும் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பதில் மிகவும் எச்சரிக்கை தேவை.

உணவு வகைகள்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பயிறு வகைகள், கேரட்,பசலை கீரை,கிழங்கு    வகைகள் வெள்ளரிக்காய்,சிவப்பு ழுள்ளங்கி,சீஸ்,ஆப்பிள்,பாதாம்,தேங்காய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்வர்கள் இனிப்பு வகைகளை தவிர்ப்பதால் நீரழவு நோய்கள் உண்டாவதை தவிர்க்கலாம்

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 5,6,8,14,15,17
நிறம் - வெண்மை, நீலம்
கிழமை- வெள்ளி, சனி 
கல்-வைரம்
திசை -  தென்கிழக்கு
தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்



மேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1&ம் பாதம்)

மேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன.

உடலமைப்பு,

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கணிந்த பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள்  எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.

குண அமைப்பு,

 மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து  தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு  உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்.  தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு  எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.
                      தன்னுடைய கௌரவத்திற்கும், பெருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புகளை ற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகலை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.

மணவாழ்க்கை,

 மேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன், மனைவி அனுசரித்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும் என்றாலும் குடும்பத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். குடும்பத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் நல்லது செய்தாலும் இவரால் நல்ல பெயரை எடுக்க முடியாது.  மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி வழி உறவுகளாலும் பிரச்சினைகள் எற்படும். இதனால் அடிக்கடி விரக்தி மனோபாவத்திற்கு தள்ளப்படுவார்கள்.

பொருளாதாரநிலை,

மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.

புத்திரபாக்கியம்,

 இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம்.

தொழில்,

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும்,  பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில்  கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு ªவ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும்.

உண்ண வேண்டிய உணவுவகைகள்,

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 1,2,3,9,10,11,12
நிறம் - ஆழ்சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல்- பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்

Blogger Gadgets