Sunday, July 6, 2014


சுகபா யோகம் , காம்பயோகம்,  மதன யோகம்  ஜோதிடக்குறிப்பு



  ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்க, 11ம் இடத்தில் 2ம் இடத்ததிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்து, மேலும் இந்த சேர்க்கைக்கு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால், அதற்கு "சுகபா யோகம்" ஆகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர், பிறந்ததிலிருந்து எந்த துன்பமும் இல்லாமல்,கோடீஸ்வரர்களின் வீட்டில் பிறந்து சகல செளக்கியங்களையும் அனுபவிப்பார்கள். கவலையில்லாதவர்களாக‌, புகழுடையவர்களாக இருப்பர்.

 ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் லக்கினம் விருச்சிகமாக அமைந்து அதில் குரு மற்றும் சுக்கிரன் அமர, 11ம் இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் அது மதன யோகம் எனப்படும். இந்த யோகத்தை உடைய ஆண்கள் பெண்கள் விரும்பும்படியாக பேசுவர், பெண்களால் விரும்பப்படுவர்!

No comments:

Blogger Gadgets