பல்கலை வல்லுனர் : இலக்கினத்திற்கு 1,4,8இல் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்பட்டால் அவர் பல கலைகளை கற்றவராய் இருப்பார் .
சினிமாத் தொழில் : 10இல் செவ்வாயும் ராகுவும் கூடி இருந்தால் சினிமாத் தொழில் புரிய நேரும் .
மனைவியால் விரயம்: ஒரு ஜாதகருடைய விரய ஸ்தானமே மனைவியின் லக்கினமாக அமைந்தால் அந்த மனைவியினால் ஜாதகர் தமது பெரும் பொருளை இழந்து தமது வாழ்நாள் முழுவதும் விரக்தியிலேயே காலம் கழிப்பார் .எனவே திருமண பொருத்தம் பார்க்கும் போது கூடிய வரையில் மனைவியின் லக்கினம் கணவனுடைய லக்கினத்திற்கு ஏழாவது வீட்டிற்குள் அமைந்து இருப்பது உத்தமம் இல்லையேல் மனைவியால் தீராத இடர் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் .
காலதாமத திருமணம் : ஜாதகத்தில் சூரியன் 2,7,8இல் இருந்தால் திருமணம் தாமதமாக நடக்கும் .ராகு/கேது 2,7,8இல் இருந்தாலும் திருமணம் தடைபட்டு காலதாமதமாக நடக்கும் .
சகட தோஷம் : ஆறாம் இடத்தில் சந்திரன் இடம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு எதிலும் தோல்வியே ஏற்படும் ,இது சகட தோஷம் எனப்படும். குருவுக்கு 6,8,12 இல் சந்திரன் இடம் பெற்றாலும் சகட தோஷம் ஏற்பட்டு வாழ்க்கையில் தோல்விகளே ஏற்படும்.
மருத்துவக் கல்வி :
சூரியனும் ,செவ்வாயும் கெடாமல் கூடி இருந்தாலும் பரிவர்த்தனை பெற்றாலும் ,சாரம் மாறி இருந்தாலும் மருத்துவத்துறை கல்வி அமையும் .கேது இலக்கினத்திற்கு 9-10-11 ஆகிய ஸ்தானங்களில் பலம் பெற்று இருந்தாலும் மருத்துவத்துறை ஜீவனம் அமையும் .
Thursday, January 30, 2014
இராஜயோகம்: ஜெனன ஜாதகத்தில் நவகிரஹங்களும் சுபர்களின் நட்சத்திரங்களில் அமைந்து இருப்பது ராஜயோக லட்சணம் ஆகும் .இப்படி அமையப் பெற்றவர்கள் எதிர்காலத்தில் ராஜ்ய அதிகாரம் அல்லது ராஜயோகமான வாழ்க்கைஐ அடைவார்கள்.
சர்ப்ப தோஷம் : ஜெனன ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடனும் சூரியன் ராகுவுடனும் இணைந்து காணப்பட்டால் சர்ப்பதோஷம் ஆகும் இந்நிலை உள்ளவர்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் அடைவது கடினம் .
அரசியல் : அரசியலில் யோகங்கள் சிறப்பாக அமையப்பெற்று நல்ல திசா புத்திகள் நடைபெற்றால் மட்டுமே சாதனைகள் செய்ய முடியும் 3,6,11இல் சூரியன் ,செவ்வாய் போன்ற கிரகங்கள் பலமுடன் அமையப்பெற்று குரு பார்வை உண்டானால் அரசியலில் சாதனைகள் செய்யலாம் .
இரகசியம் :
செவ்வாயும் ,புதனும் சேர்ந்து செவ்வாய் அல்லது புதன் வீட்டில் அமர்ந்தால் ஜாதகர் இரகசியங்களை காப்பதில் வல்லவராக இருப்பார் .
பால்ய விவாஹம் : 7ஆம் இடத்தில் குரு இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் குரு 7இல் உச்சம் ஆனாலும் பால்ய விவாஹம் .
புத்திர தோஷம்: ஐந்துக்கு உடையவன் நீசம் அடைந்திருக்க ஐந்தில் பாபிகள் அமர்ந்திருக்க சுபர்கள் ஐந்தை பாராது இருக்க ஜாதகனுக்கு புத்திரர் இல்லை .
தார தோஷம் : சுக்கிரன் இலக்கினத்துக்கு 6,8,12இல் இருந்து அசுபர் பார்வை பட்டால் திருமணம் ஆவது கடினம் .திருமணம் ஆனாலும் மனைவி நிலைக்க மாட்டாள் .
கடன்: புதன் தனியாக ஆறாமிடத்தில் அமர்ந்தால் ஜாதகர் கடன்களை அடைக்க மிகவும் சிரமப் படுவார் .
திடீர் யோகம் : 11இல் ராகு இருந்து அந்த இடம் மேஷம் ,ரிஷபம் ,கடகம்,கன்னி,மகரமாக இருந்து அந்த ராகுவுக்கு கேந்திரத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்து விட்டால் ராகு திசை ஜாதகரை திடீர் யோகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் .
முக்தி யோகம் : 12 அம் அதிபதி 12 இல் ஆட்சி பெற்றால் முக்தி யோகம் உண்டாகும் .இவர்கள் இறை பணியில் சிறப்புற்று விளங்குவர் .
சூப்பர் போட்டோ :
Tuesday, January 28, 2014
தீர்க்க சுமங்கலி :
பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமான 8 _ ஆம் இடத்தை பாவகிரகங்கள் இடம் பெற்று குடும்பஸ்தனமான இரண்டில் சுபக்கிரகங்கள் இடம் பெற்று இருந்தால் அந்த பெண் கணவனுக்கு முன்பாக இறப்பாள் .
அதிர்ஷ்ட ஜாதகம்:
இலக்கினம் எதுவாக இருப்பினும் ஜாதகத்தில் சூரியன் நின்ற ஸ்தானத்திற்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டமுடைஅவராக இருப்பார் .
விதவை விவாகம் :
சுக்கிரனும் ,செவ்வாயும் ஏழாமிடத்தில் இணைந்து இருந்தாலும் விதவை பெண்ணை விவாகம் செய்வான் .
திருமண தோஷம் :
களத்திர ஸ்தானமாகிய ஏழாமிடத்தில் சந்திரன் ,சுக்கிரன் இணைந்து இருந்தாலும் சனி ,செவ்வாய் இணைந்து இருந்தாலும் ஜாதகனுக்கு மனைவி இல்லை .
மனைவியால் யோகம்: ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி இலக்கினத்திலோ ,இரண்டிலோ ,பதினொன்றிலோ இடம் பெற்று இருந்து இலக்கின அதிபதி மேற்கூறிய ஸ்தானங்களில் வீற்றிருந்தால் மனைவியால் பொருள் சேர்க்கை உண்டாகும் .
அரசுப் பணி : இலக்கின அதிபதி சூரியனாகி குருவுடன் சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் ,சூரியன் குரு இவர்கள் பலம் பெற பிறந்தாலும் சூரியன் பலம் பெற்று குரு பார்வை இட்டாலும் ஜாதகன் அரசு பணியில் அமர்வான் .
கல்வித்தடை :
பாவியின் வீடு இரண்டாம் வீடாகி அதில் புதன் நின்றாலோ புதன் இருக்கும் இரண்டாம் இடத்தில் வேறு பாவக் கிரஹம் இருந்தாலோ கல்வித் தடை உண்டாகும் .